வேலூர் மத்திய சிறையில் முருகன் 5வது நாளாக உண்ணாவிரதம்

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார். ஆனால் அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பரோல் வழங்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் கடந்த 8ம்தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

நேற்று முதல் மவுன விரதமும் இருக்கிறார். அவரது போராடத்தை கைவிட சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். ஆனால் அவர் பேச்சுவார்தையை தவிர்த்துள்ளார். இன்று 5வது நாளாக உண்ணாரவிரத்தை தொடர்ந்து வருகிறார். தொடர்ந்து அவரின் உடல் நலத்தை சிறைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: