×

கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டங்களும் விரைவில் மாற்றப்படும்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: பொறியியல் பாடத்திட்டங்களை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பாடத்திட்டங்களும் விரைவில் மாற்றப்பட இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் மண்டல மாநாட்டை சென்னையில் உள்ள அண்ணா பல்கலை.யில் அமைச்சர்கள் பொன்முடி, கணேசன் துவக்கி வைத்தனர். இதில் நான் முதல்வன் திட்டம் என்றால் என்ன? திட்டத்தை எவ்வாறு நடைமுறை படுத்த வேண்டும்? மாணவர்கள், பேராசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயிற்சிகள் குறித்து கல்லூரி முதல்வர்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் விளக்கினர்.

இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் பொன்முடி தமிழகத்திற்கு இணையான தனித்துவமான கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு வருவதாக கூறிய அவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தபட இருப்பதாக தெரிவித்தார். பொறியியல் படிப்பை படித்து முடிப்பவர்கள் அவரவர் பகுதிகளில் சிறு, குறு தொழில்களை தொடங்க வேண்டும் என்றும், அதற்காக படிப்புடன் கூடுதல் படிப்புகளை கற்பித்து சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

முன்னதாக பேசிய முதலமைச்சரின் தனிச்செயலாளர் உதய சந்திரன் வேலை வாய்ப்பிற்கேற்ற வகையில் பாடத்திட்டம் மாற்றி வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ,மாணவர்களை தயார் படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மாநாட்டால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 68 பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.


Tags : College of Arts and Sciences ,Minister of Higher Education ,Ponmudi , Arts-Science College, Curriculum, Change, Minister of Higher Education, Ponmudi
× RELATED பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன்...