×

ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஆண் குழந்தை

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா - விசாகன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த் தம்பதியினருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இளைய மகள் சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வினுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். சவுந்தர்யா - அஸ்வின் விவாகரத்துக்கு பின்னர் வேத், சவுந்தர்யா உடனே வசித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டும் சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் விசாகன் உடன் மீண்டும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கர்ப்பம் அடைந்த சவுந்தர்யாவுக்கு நேற்றிரவு ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை சவுந்தர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘கடவுளின் அபரிமிதமான கருணையினாலும் பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், விசாகன், வேத் மற்றும் நான் வேத்தின் இளைய சகோதரன் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மருத்துவர்களுக்கு நன்றி’ என கூறியுள்ளார்.

Tags : Rajini ,Soundarya , Rajini's daughter Soundarya has a baby boy
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு