×

திருப்பதியில் எடை போடுவதில் முறைகேடு 14 இறைச்சி கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு-திடீர் சோதனையில் அதிகாரிகள் அதிரடி

திருப்பதி :  திருப்பதி நகரில் நுகர்வோரை ஏமாற்றி சிக்கன், மட்டன், மீன், இறைச்சி கடைகளில் எடை குறைத்து மோசடியில் ஈடுபட்ட விற்பனையாளர்கள் 14 பேர் மீது விஜிலென்ஸ் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பதியில் லீலாமஹால், சீனிவாசபுரம் மீன், சிக்கன் மட்டன் கடைகளை எடை குறைவாக வழங்கி பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

இதனை அடுத்து மாநில விஜிலென்ஸ் அமலாக்கத்துறை  உத்தரவின் பேரில் திருப்பதி விஜிலென்ஸ் அமலாக்க அதிகாரி ஈஸ்வர் ரெட்டி தலைமையில் நகரில் பல்வேறு பகுதியில் உள்ள சிக்கன், மட்டன், மீன் இறைச்சி விற்பனை கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் எடையில் மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டு 14 விற்பனையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விற்பனையாளர்கள் எடை கற்கள் சரியான முறையில் அளவீடு இருக்க வேண்டும். தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை செய்யப்படும். நுகர்வோரை பாதிக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள்.

Tags : Tirupati , Tirupati: 14 sellers involved in the scam in Chicken, Mutton, fish and meat shops in Tirupati city
× RELATED கோவிந்த நாமாவளி 10 லட்சத்து 1,116 முறை...