×

சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகின்ற 19 வீரர், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் நடுவர்களுக்கு முதலமைச்சர் விருது மற்றும் ரூ.16.30 இலட்சம் ஊக்கத்தொகை - தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1130 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.16.28 கோடி உயரிய ஊக்கத்தொகை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  
வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகின்ற 19 வீரர், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் நடுவர்களுக்கு முதலமைச்சர் விருதினையும், அதற்கான ஊக்கத்தொகையாக 16 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கான  காசோலைகளையும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1130 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 16 கோடியே 28 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.

சிறந்த  விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் நடுவர்களுக்கு முதலமைச்சர் விருதுகள்; பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கங்கள் வென்றதற்காக 2018-19 மற்றும் 2019-20ஆம் ஆண்டுகளுக்கான 8 சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், 4 பயிற்றுநர்கள், 4 உடற்பயிற்சி இயக்குநர்கள் / உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் 3 நடுவர்கள், என மொத்தம் 19 நபர்களுக்கு முதலமைச்சர் விருதுகளையும், விருதிற்கான ஊக்கத்தொகையாக 16 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கான  காசோலைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வாழ்த்தினார்கள். தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை

கடந்த 2019-2020 ஆம் ஆண்டு நடைபெற்ற 65-வது தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் பதக்கங்கள் வென்ற 659 மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 7 கோடியே 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;

கடந்த 2019-2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான சப்-ஜுனியர், ஜுனியர், இளையோருர் மற்றும் சீனியர் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 291 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையாக  5 கோடியே 93 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்;

கடந்த 6.4.2022 முதல் 17.4.2022 வரை மத்திய பிரதேசத்தில், போபால் நகரில் நடைபெற்ற 12-வது தேசிய அளவிலான சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் குழுப்போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 18 விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை 27 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;

கடந்த 23.10.2019 முதல் 27.10.2019 வரை தென் கொரியாவில், சுங்ஜுவில் நடைபெற்ற ஆசிய ரோயிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்ற திரு. லட்சுமணன் ரோஹித் மரடப்பா அவர்களுக்கு ஊக்கத் தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை;

கடந்த 19.3.2021 முதல் 21.3.2021 வரை உத்தரகாண்டில் நடைபெற்ற பெண்களுக்கான 31-வது தேசிய அளவிலான சீனியர் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் குழுப்போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 4 விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.1 இலட்சம் வீதம் மொத்தம் 4 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;

2022 ஆம் ஆண்டிற்கான சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த திரு. வி.எஸ். ராகுல் அவர்களுக்கு
3 இலட்சம் ரூபாய்க்கான காசோலை;

கடந்த 4.11.2021 முதல் 13.11.2021 வரை கொலம்பியவில், இபாகு-டோலிமாவில் நடைபெற்ற இன்லைன் ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் ஜுனியர் ஆண்கள் 15 கீ.மீ. எலிமினேஷன் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த
திரு. ஆனந்த்குமார் வேல்குமார் அவர்களுக்கு ஊக்கத் தொகையாக 4 இலட்சம் ரூபாய்க்கான காசோலை;

கடந்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த 144 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையாக 2 கோடியே 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்;

கடந்த 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான சதுரங்க விளையாட்டில் பெண்கள் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த
செல்வி. ஸ்ரீஜா சேஷாத்திரி மற்றும் செல்வி. கே. பிரியங்கா ஆகியோருக்கு தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் 6 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;

கடந்த 2016, 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த
திரு, ஆர். பிரக்ஞானந்தா, திரு. ப. இனியன், எல்.ஆர். ஸ்ரீஹரி ஆகிய 3 நபர்களுக்கு தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் 9 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;

கடந்த 28.9.2021 முதல் 5.10.2021 வரை தோஹாவில் நடைபெற்ற 25-வது ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஜி. சத்தியன்  ஆண்கள் இரட்டையர் பிரிவில் 1 வெண்கலப்பதக்கம் மற்றும் ஆண்கள் குழுப்போட்டியில் 1 வெண்கலப்பதக்கம் வென்றதற்கு ரூ.10 இலட்சம், திரு.சரத்கமல் அவர்கள் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 1 வெண்கலப்பதக்கம் மற்றும் ஆண்கள் குழுப்போட்டியில் 1 வெண்கலப்பதக்கம் வென்றதற்கு ரூ.10 இலட்சம், என மொத்தம் 2 நபர்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;

கடந்த 1.10.2021 முதல் 7.10.2021 வரை உஸ்பெகிஸ்தானில் தாஷ்கண்டில் நடைபெற்ற 12-வது உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற ஜி. குமார் அவர்கள் 75 கிலோ எடைபிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு ரூ.15 இலட்சம், திரு. ஆர். பெஞ்சமின் ஜெரோட்,  65 கிலோ எடைபிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றதற்கு ரூ.10 இலட்சம் மற்றும் திரு.ஆர். கார்த்திகேஸ்வர் அவர்கள் 85 கிலோ எடைபிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றதற்கு ரூ.10 இலட்சம், என மொத்தம்  3 நபர்களுக்கு ஊக்கத் தொகையாக 35 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;

கடந்த 9.2.2020 முதல் 15.2.2020 வரை சென்னையில் நடைபெற்ற 77-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற செல்வி ஜோஷ்னா சின்னப்பா அவர்களுக்கு ஊக்கத் தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை; என மொத்தம் 16 கோடியே 28 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை 1130 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு  உயரிய ஊக்கத்தொகையாக  தமிழ்நாடு முதலமைச்சர்  வழங்கி வாழ்த்தினார்.

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தலைமை அலுவலகத்தில் “ஆடுகளம்” தகவல் மையம் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான விவரங்கள். தகவல்கள். புகார்கள், கோரிக்கைகள் குறித்து தெரிவித்திட தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள “ஆடுகளம்” தகவல் மையத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். இந்த தகவல் மையம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும். இதுதொடர்பாக  9514000777 என்ற அலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

முதலமைச்சர் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு:

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.  sdat.tn.govt.in என்ற இணையதளத்தில் இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள வசதி மூலமாகவும், ஆடுகளம் (tnsports) ஆன்ராய்டு செயலி மூலமாகவும், அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் நேரடியாகவும் இந்த போட்டியில் பங்கேற்பதற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம்.

முதற்கட்டமாக கபடி போட்டிக்கான முன்பதிவு பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் பிரிவு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் வகையில் பதிவு தொடங்கப்படுகிறது. படிப்படியாக தடகளம், கூடைப்பந்து, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பதற்கான முன்பதிவும் தொடங்கும்.

இந்த விழாவில்,  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு,  இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்  மெய்யநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்  திரு. இ. பரந்தாமன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் அசோக் சிகாமணி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை  முதன்மைச் செயலாளர் செல்வி. அபூர்வா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் மருத்துவர் கா. ப. கார்த்திகேயன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : K. Stalin , National Sports Competition, Victory, Player, Award, M.K.Stalin
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...