துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியார் 99 வயதில் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

போபால்: துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமி நேற்று காலமானார். துவாரகா பீடத்தின் தலைவராக இருந்து வந்த ஜகத்குரு ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமி கடந்த ஓராண்டாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் மத்தியப் பிரதேசத்தின் நர்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீதம் ஜோதீஸ்வர் ஆசிரமத்தில் நேற்று மாலை இறந்தார்.

அவருக்கு வயது 99.மத்தியப் பிரதேசத்தில் சியோனி மாவட்டத்தின் டிகோரி கிராமத்தில் 1924ம் ஆண்டு பிறந்த இவர், தனது 9வது வயதில் ஆன்மீக பயணத்தை தொடங்கினார். கடந்த 1981ம் ஆண்டு முதல் சங்கராச்சாரியராக இருந்து வந்தார்.குஜராத்தில் உள்ள துவாரகா பீடம், உத்தரகாண்டில் உள்ள ஜோதிர் மடம் ஆகியவற்றுக்கும் இவர் தலைவராக இருந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: