யுஎஸ் ஓபன் டென்னிஸ் முதல் முறையாக ஸ்வியாடெக் சாம்பியன்

நியூயார்க், : யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் துனிசியாவின் ஆன்ஸ் ஜெபருடன் (28 வயது, 5வது ரேங்க்) மோதிய ஸ்வியாடெக் (21 வயது, போலந்து), அதிரடியாக விளையாடி 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை மிக எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

2வது செட்டில் ஜெபர் கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த நிலையில், ஸ்வியாடெக் 6-2, 7-6 (7-5) என நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 1 மணி, 51 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. யுஎஸ் ஓபனில் ஸ்வியாடெக் முதல் முறையாக பட்டம் வென்றுள்ளார். நடப்பு சீசனில் இது அவர் வெல்லும் 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். பிரெஞ்ச் ஓபனில் 2 முறை (2020, 2022), யுஎஸ் ஓபன் (2022) என மொத்தம் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை இகா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: