வீரபத்திர சுவாமி கோயில் விழாவில் சாட்டை அடி வாங்கிய பக்தர்கள்

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே கோயில் விழாவில் பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி  தாலுகா, வீரமலை கிராமத்தில் குரும்பர் இன மக்களின் குல தெய்வமான வீரபத்திர  சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதல் நாள் சந்தூரில் இருந்து  சுவாமி புறப்படுதல் நிகழ்ச்சியும், 2ம் நாள் சேவாட்டமும், 3ம் நாள்  கும்பாபிஷேக விழாவும் நடந்தது. தொடர்ந்து நேற்று பக்தர்கள் தலைமீது  தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தலைமீது பூசாரி தேங்காய்  உடைத்து, வேண்டுதல் நிறைவேற்றினார்.

அதை தொடர்ந்து, சாட்டை அடி வாங்கும்  நிகழ்ச்சியில், கோயிலில் கூடியிருந்த ஆண்களும், பெண்களும் தரையில்  மண்டியிட்டு கைகளை மேலே தூக்கிய நிலையில், அவர்களை பூசாரி சாட்டையால்  அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இவ்வாறு சாட்டையடி வாங்கினால், பேய், பிசாசு  பிடித்திருந்தால் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த விழாவில்,  சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Related Stories: