×

வேதாரண்யத்தில் கடல் சீற்றம்: 5ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம்  வேதாரண்யம்  பகுதியில் கடந்த 2 நாட்களாக காற்று பலமாக வீசி வருகிறது. பலத்த காற்றின் காரணமாக கடலில் உள் பகுதியில் கடும் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.நேற்று அதிகாலை ஆறுகாட்டுதுறையில் இருந்து 20க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர். மீனவர்கள் யாரும் செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.



Tags : Vedaranyam, sea rage, fisherman, to the sea to fish, did not go
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...