×

36வது மெகா முகாமில் 12.62 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்

சென்னை: தமிழகத்தில் நடந்த முகாமில் மொத்தம் 12.62 லட்சம்  பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில், 36வது கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைப்பெற்றது. 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் மற்றும் 2ம் தவணை தடுப்பூசிகள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது. நேற்று நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமில் வயதிற்கு மேற்பட்ட 12,62.089 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 81,202 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 2,98,634 பயனாளிகளுக்கும் மற்றும் 9,02,253 பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.49% முதல் தவணையாகவும் 91.09% இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு இன்று கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது என சுகாதாரதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று நடைப்பெற்ற கோவிட் -19 தடுப்பூசி முகாமில் 12.62 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதுவரை நடைபெற்ற 35 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 22 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : 12.62 lakh people have been vaccinated in the 36th mega camp
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...