வரும் 2024 லோக்சபா தேர்தலில் மோடிக்கு சவால் கொடுக்கும் தலைவர் யார்?: கருத்துக் கணிப்பில் புது தகவல்

புதுடெல்லி: வருகிற லோக்சபா தேர்தலின் போது பிரதமர் மோடிக்கு சவால் கொடுக்கும் தலைவராக யார் இருப்பார்கள்? என்ற கேள்விக்கு பொதுமக்கள் அளித்த பதிலில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றனர். பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் போட்டியில் உள்ளனர். பிரதமர் மோடிக்கு எதிராக வலுவான தலைவரை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் பிரதமர் மோடிக்கு எதிரான வலுவான தலைவர்கள் பட்டியிலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பெயர்கள் நீள்கின்றன.

இந்நிலையில் ‘சி-வோட்டர்’ நிறுவனம் நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது. அந்த சர்வேயில், 2024ல் நடக்கும் தேர்தலின் போது பிரதமர் மோடிக்கு யார் மிகப்பெரிய சவாலாக யார் இருப்பார்கள்? கெஜ்ரிவாலா அல்லது நிதிஷ் குமாரா? என்று கேட்கப்பட்டது. இந்த சர்வேயின் முடிவில் பிரதமர் மோடிக்கு எதிராக கெஜ்ரிவால் மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று 65 சதவீதம் பேரும், நிதிஷ் குமார் கடுமையான போட்டியாளராக இருப்பார் என்று 35 சதவீதம் ேபரும் கூறியுள்ளனர்.

டெல்லியில் ஆட்சியை பிடித்த கெஜ்ரிவால், சமீபத்தில் அவரது ஆம்ஆத்மி கட்சி பஞ்சாப்பிலும் ஆட்சியை பிடித்தது. அதற்கடுத்ததாக வரும் சில மாநிலங்களில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல்களுக்கு அக்கட்சி தயாராகி வருகிறது. பாஜகவின் மிகப்பெரிய கோட்டையான குஜராத்தில் தீவிர பிரசாரத்தில் ஆம்ஆத்மி கட்சி ஈடுபட்டு வருகிறது. அதேநேரம் சமீபத்தில் டெல்லி வந்த நிதிஷ் குமார், சுமார் 12 எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனால் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளின் வியூகங்கள் சூடுபிடித்துள்ளன.

Related Stories: