எழுச்சிமிக்க, உணர்ச்சிமிக்க, போராளி ஹீரோ வைகோ: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: திரைப்படத்தில் வரும் ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டவை, வைகோ சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ என  மாமனிதன் வைகோ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் எழுச்சிமிக்க, உணர்ச்சிமிக்க, போராளி ஹீரோ வைகோ என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் மாமனிதன் வைகோ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வைகோ குறித்து பேசியுள்ளார். வைகோ சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ எனவும் உயரத்தில் மட்டுமல்ல, லட்சியம், தியாகத்தில் உயர்ந்தவர் வைகோ எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

வைகோவின் 56 ஆண்டு அரசியல் பொதுவாழ்வை மிகக் குறுகிய காலகட்டத்தில் பேச முடியாது என முதல்வர் பேசினார். மேலும் வைகோவின் அரசியல் பயணம் பலருக்கு ஒரு எடுத்துக்காட்டு, அவரது உடல்நலம் எனக்கு மட்டுமல்ல, இந்தநாட்டுக்கே முக்கியம் என முதல்வர் பேசியுள்ளார்.  

Related Stories: