கருப்பட்டி இட்லி

செய்முறை :

இட்லி அரிசியை 8 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டையும் தனித்தனியாக இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். சிறுபருப்பை சுத்தம் செய்து, சிவக்க வறுத்து வேக வைக்கவும். (பாதி வெந்தால் போதும்) இத்துடன் கரைத்து, பொடித்த கருப்பட்டியையும், தேங்காய்த்துருவலையும் சேர்த்து இறக்கி வைத்துக்கொள்ளவும். இட்லித்தட்டில் அரை கரண்டி இட்லி மாவு ஊற்றி, மத்தியில் கருப்பட்டிக் கலவையை பரப்பி, அதன்மேல் மேலும் அரைக்கரண்டி இட்லி மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். இந்த இட்லி புதிய சுவையுடன் இருக்கும்.

குறிப்பு:  இட்லி மாவு அதிகம் புளிக்கக் கூடாது.

Related Stories:

More
>