என் காதல் வாழ்க்கையை சீரழித்தது ஷாருக்கான்: நடிகை ஸ்வரா பாஸ்கர் பகீர்

மும்பை: என் காதல் வாழ்க்கையை கெடுத்தது ஷாருக்கான், ஆதித்யா சோப்ரா ஆகியோர் தான் என்று நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்தார். பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘எனது காதல் வாழ்க்கையை சீரழித்தது ஆதித்யா சோப்ரா, ஷாருக் கான் ஆகிய இருவரும்தான். ஏனென்றால் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ என்ற திரைப்படத்தை சிறுவயதில் பார்த்தேன். அன்றிலிருந்தே ஷாருக் கான் போல் இருக்கும் அந்த மனிதரை தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனை உணர பல வருடங்கள் ஆனது. உறவுகளைப் பொறுத்தவரை நான் மிகவும் நல்லவள் என்று சொல்ல முடியாது’ என்றார்.

தொடர்ந்து அவருடன் இருந்த நடிகை ​பூஜா சோப்ரா கூறுகையில், ‘ஸ்வாரா பாஸ்கர் தனிமையில் இருக்கிறார். அவர் ‘டேட்டிங்’ செல்ல தயாராக இருக்கிறார்’ என்றார். தொடர்ந்து ஸ்வாரா பாஸ்கர் கூறுகையில், ‘இப்போது என்னால் முடியாது. அதற்கான சக்தி என்னிடம் இல்லை. தனியாக வாழ்வது கடினமானது. பங்குதாரர் ஒருவரை ஏற்பது னெ்பது குப்பையை வடிகட்டுவது போன்றது’ என்றார்.

Related Stories: