இங்கி.க்கு எதிரான முதல் டி.20: இந்திய மகளிர் அணி படுதோல்வி

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி.20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் நேற்றுஇரவு நடந்த முதல் டி.20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்தது. அதிகபட்சமாக தீப்தி சர்மா 29, ஸ்மிருதி மந்தனா 23, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 20 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து 13 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 134ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

Related Stories: