×

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இகா ஸ்வியாடெக் சாம்பியன்: ரூ.20.71 கோடி பரிசுத்தொகை

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதி போட்டி இன்று அதிகாலை நடந்தது. நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் 21 வயதான இகா ஸ்வியாடெக், 5ம் நிலை வீராங்கனை துனிசியாவின் 28 வயது ஓன்ஸ் ஜபீர் மோதினர். பரபரப்பாக நடந்த இந்தபோட்டியில் முதல் செட்டை 6-2 என ஸ்வியாடெக் எளிதாக கைப்பற்றினார். 2வது செட்டில் ஜபீர் கடும் சவால் அளித்தார்.

டைப்ரேக்கர் வரைசென்ற இந்த செட்டை 7(7)-6(5) என ஸ்வியாடெக் தன்வசப்படுத்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் முதன்முறையாக யுஎஸ் சாம்பியன் பட்டத்தை ஸ்வியாடெக் வென்றார். மேலும் இதுஅவருக்கு 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். 2020 மற்றும் இந்த ஆண்டில் பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்றுள்ளார். வெற்றி பெற்ற அவருக்கு ரூ.20.71கோடி பரிசுத்தொகை கிடைத்தது. 2வது இடம் பிடித்த ஜபீருக்கு ரூ.10கோடி வழங்கப்படடது.


Tags : US Open Tennis ,IGA Sviatech Champion , US Open Tennis; IGA Sviatech Champion: ₹20.71 crore prize money
× RELATED அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன்