திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு

சென்னை: சமத்துவ மக்கள் கழக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்த முனீஸ்வரன்  அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய பொறுப்பாக கொள்கை பரப்பு செயலராக நியமிக்கப்பட்டார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக அந்தோணி விஜயன்,  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளராக மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டு அதற்கான சான்று வழங்கப்பட்டது. இவர்களுக்கு கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், பொருளாளர் கண்ணன், தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், இளைஞரணி துணை செயலாளர் மணலி தங்கம் பாலசேகர்,  திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் மதுரை வீரன், மகளிர் அணி துணை செயலாளர் தேவி, திருவொற்றியூர் பகுதி செயலாளர் முத்துக்குமார், மணலி பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியம்,  மணலி புதுநகர் பகுதி இளைஞரணி செயலாளர் கண்ணப்பன், திருவள்ளூர்  மாவட்ட நிர்வாகிகள் சண்முகம், ஸ்டாலின், ஆல்பர்ட், குணா, மாத்தூர் அந்தோணி, புழல் சுரேஷ்குமார், சாமுவேல், பாலசிங், பொன்னேரி தொகுதி பிரதீப், அன்பரசன், சோழவரம் ஒன்றிய செயலாளர் முருகதாஸ், மாதவரம் தொகுதி 19 வட்ட செயலாளர் வாசு, 23வது வட்ட செயலாளர் வசந்தகுமார், மாதவரம் பால்வண்ணன், கிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: