×

இந்திய ஒற்றுமை பயணம்: தனது 5 வது நாள் நடைபயணத்தை கேரளாவில் தொடங்கினார் ராகுல் காந்தி

திருவனந்தபுரம்: கேரளா, செறுவாரகோணத்தில் ராகுல் காந்தி தனது நடைபயணத்தை தொடங்கினார். தமிழகத்தில் 4 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி நேற்று குமரி மாவட்டம் தலச்சன்விளையில் யணத்தை நிறைவு செய்த நிலையில், இன்று கேரளாவில் தொடங்கியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார்.

இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு சுமார் 700 மீட்டர் தூரம் நடந்து வந்த ராகுல்காந்தி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

 குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணம் சென்ற ராகுல்காந்தி சுமார் 56 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், கேரள எல்லையில் இன்று தனது பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். கேரளா, செறுவாரகோணத்தில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கினார்.

Tags : Ragul Gandhi ,Kerala , India Unity Tour, Trekking, Kerala, Rahul Gandhi
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...