×

சென்னையில் இன்று மெகா தடுப்பூசி முகாம் 2000 சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு: மாநகராட்சி சுகாதாரத்துறை தகவல்

சென்னை: சென்னையில் 2000 சிறப்பு முகாம்கள் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் மற்றும் 2வது தவணை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள், தங்கள் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று செலுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து தீவிரப்பட்டு வருகிறது. 12 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை பல்வேறு பிரிவுகளாக பிரித்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரையில் 35 மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள் மூலம் 5 கோடியே 22 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

36 வது மெகா சிறப்பு முகாம் இன்று  (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற முகாம்கள் மூலம் 12.28 லட்சம் பேர் பயன்அடைந்தனர். இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இந்த முகாம்களை இதுவரை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும் முகாம்களில் எல்லா தடுப்பூசிகளும் போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை என்னும் பூஸ்டர் தடுப்பூசி போட பொதுமக்களிடம் அதிக ஆர்வம் இல்லை. இந்த தடுப்பூசி வருகிற 30ம் தேதி வரை இலவசமாக போடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தொடருமா, இல்லையா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. மத்திய அரசு அறிவித்துள்ள இந்த கால அவகாசத்திற்குள் பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசியை கட்டணம் இல்லாமல் போட்டுக்கொள்ளலாம். சென்னையில் 2000 சிறப்பு முகாம்கள் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் மற்றும் 2 வது தவணை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள், தங்கள் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று செலுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.



Tags : Mega Vaccination Camp 2000 ,Chennai ,Corporation Health Department Information , Mega Vaccination Camp 2000 special camps organized in Chennai today: Corporation Health Department Information
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...