யுஎஸ் ஓபன் டென்னிஸ் பைனலில் அல்கரஸ்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ் தகுதி பெற்றார். அரையிறுதியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியபோவுடன் மோதிய அல்கரஸ் 6-7 (6-8), 6-3, 6-1, 6-7 (5-7), 6-3 என 5 செட்களில் 4 மணி, 19 நிமிடங்களுக்கு கடுமையாகப் போராடி வென்றார். மற்றொரு அரையிறுதியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 7-6 (7-5), 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் கரென் கச்சனோவை (ரஷ்யா) வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் அல்கரஸ் - கேஸ்பர் மோதுகின்றனர். ராம் - சாலிஸ்பரி சாம்பியன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் நெதர்லாந்தின் கூல்ஹாப் - நீல் ஸ்குப்ஸ்கி (2வது ரேங்க்) ஜோடியுடன் மோதிய ராஜீவ் ராம் (அமெரிக்கா) - ஜோ சாலிஸ்பரி (இங்கிலாந்து) நம்பர் 1 ஜோடி 7-6 (7-4), 7-5 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

Related Stories: