உபி.யும், பீகாரும் ஒன்றாக இணைந்தால் மோடி காலி: சமாஜ்வாடி பேனரால் பரபரப்பு

லக்னோ: பீகாரில் பாஜ. உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார். மேலும், பாஜ.வுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க போவதாகவும் அறிவித்தார். அதன்படி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா, உபி முன்னாள் முதல்வர்கள் முலாயம் சிங், அகிலேஷ் ஆகியோரை சமீபத்தில் டெல்லியில் சந்தித்து பேசினார்.  இந்நிலையில், லக்னோவில் உள்ள சமாஜ்வாடி கட்சி தலைமை அலுவலகத்துக்கு வெளியே வைக்கப்பட்டு உள்ள பேனரில், நிதிஷ், அகிலேஷ் ஆகியோருடன் புகைப்படங்களுடன், ‘பீகாரும், உபி.யும் இணைந்தால் ஒன்றிய மோடி அரசு அகற்றப்படும்,’ என எழுதப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: