திருப்பதியில் ஆவணி மாத பவுர்ணமி தங்க கருட வாகனத்தில் மலையப்பர் வீதியுலா

திருமலை,: ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்க கருட வாகனத்தில் மலைப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி, ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தில் இருந்து 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 4 மாடவீதியில் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பக்தி முழக்கத்துடன் வழிபட்டனர். சுவாமி வீதியுலாவின் போது கோயில் யானைகளும், பக்தர்களின் கோலாட்டமும், நாதஸ்வர இசைக்கு மத்தியில்  சுவாமி வீதி உலா நடைபெற்றது.

Related Stories: