×

பாரதிராஜாவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை: இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். சினிமா இயக்குனர் பாரதிராஜா (81), ஆல்டெர்டு சென்சோரியம் பாதிப்புகளுடன் ஆகஸ்ட் 26ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூ பிரிவில், பல்துறை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அவரது உடல்நிலையைக் கண்காணித்தனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு நேற்று சென்று பாரதிராஜாவிடம் உடல்நலம் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். ஏற்கனவே மருத்துவமனையில் பாரதிராஜா சிகிச்சை பெற்றபோது தொலைபேசியில் அவரது மனைவியிடம் முதல்வர் நலம் விசாரித்திருந்தார். இந்த சந்திப்பின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பாடலாசிரியர் வைரமுத்து, பாரதிராஜாவின் மகன் மனோஜ் உடனிருந்தனர்.

Tags : Bharathiraja ,Chief Minister ,M.K.Stal , Bharathiraja inquired about Chief Minister M.K.Stal's health
× RELATED 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்...