×

எம்டிசிக்கு சொந்தமான ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

சென்னை: எம்டிசி மேலாண் இயக்குநர்  அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கடந்த, 1984ம் ஆண்டு முதல் தொழில் பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ) ஒன்றிய அரசின் அங்கிகாரம் பெற்ற National Council Vocational Trade (NCVT) குரோம்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில், நாளதுவரையில் 1,292 மணவர்கள், அனுபவம் வாய்ந்த பயிற்சி வல்லூநர்கள் மூலம் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். தற்பொழுது, 2022ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு பணியாளர்களின் வாரிசுகள் போக எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் 72 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. கால அளவு இரண்டு ஆண்டுகள். விண்ணப்ப படிவங்களைப் பெறுவதற்கு “முதல்வர் மாநகர் போக்குவரத்துக் கழகத் தொழிற் பயிற்சி நிலையம், மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி நிலைய வளாகம், காந்தி நகர், குரோம்பேட்டை, சென்னை-600 044, தொலைபேசி எண். 044-29535177 / கைபேசி எண். 9445030597 மற்றும் மின்னஞ்சல் மூலமாக mtciti591@gmail.com என்ற முகவரியில் அணுகவும். மேலும் இதற்கான விண்ணப்ப படிவத்தினை www.mtcbus.tn.gov.in-others-Download என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். நேரிலும் பெற்றுக் கொள்ளலாம்.



Tags : MTC ,ITIs , Apply for MTC owned ITIs
× RELATED தாம்பரம் – சென்னை கடற்கரை ரயில்கள்...