×

இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாட வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தேவேந்திரர்களின் உரிமைகளுக்காகவும், தீண்டாமையை எதிர்த்தும் வாழ்நாள் முழுவதும் போராடிய போராளி இமானுவேல் சேகரனாரின் 65 வது ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அவரது தியாகத்தையும், போர்க்குணத்தையும் போற்றுவோம். தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை 30 ஆண்டுகளுக்கு முன் சீரமைத்து அங்கு முதன்முறையாக மரியாதை செலுத்தியது நான் தான்.

தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். வரும் அக்டோபர் 9 ம் தேதி அவரது 98 வது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு ஆணையிட வேண்டும் இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதி தொடங்குகிறது. அன்று முதல் ஓராண்டுக்கு அதைக் கொண்டாடவும், அவரது வரலாறு, தியாகம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Govt ,Immanuel Sekaranar ,BAMA ,Ramadoss , Govt should celebrate Immanuel Sekaranar's memorial centenary: BAMA founder Ramadoss insists
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...