×

திருவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை அதிகரிப்பு: விற்பனையாளர்கள் மகிழ்ச்சி

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை அதிகரித்துள்ளதால், விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, ஆம்பூர் பிரியாணி என்பது போல் சுவை மிகுந்த பால்கோவாவிற்கு பிரசித்தி பெற்றது விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பால்கோவா ஆகும். திருவில்லிபுத்தூர் பால்கோ தரம் மற்றும் சுவை நன்றாக இருப்பதால் அதற்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் கிடைக்கும் தரமான பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் பால்கோவா உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் பிற மாவட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

மேலும் வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருவில்லிபுத்தூர் பால்கோவாவை பொருத்தவரை, குற்றால சீசன், சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன், ஆண்டாள் கோயில் தேரோட்டம் என வருடத்திற்கு மூன்று காலகட்டங்களில் விற்பனை அதிகளவில் இருக்கும். கடந்த மாதம் ஒன்றாம் தேதி ஆண்டாள் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை தொடர்ந்து தற்போது குற்றாலத்தில் சீசன் நன்றாக உள்ளது. இதனால் திருவில்லிபுத்தூர் வழியாக குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளமானோர் பால்கோவாவை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

முன்பு இரும்பு சட்டிகளில் பாலை கொதிக்க வைத்து பால்கோவா தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தேவை அதிகரித்துள்ளதால் இயந்திரங்களைக் கொண்டு சுவை  குறையாமல் பால்கோவா தயாரிக்கப்படுகிறது. பால்கோவா விற்பனை அதிகரித்துள்ளதால், விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : Balkova ,Thiruvilliputtur , Palcoa sales increase in Tiruvilliputhur: Sellers happy
× RELATED திருவில்லிபுத்தூரில் நள்ளிரவில்...