×

கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: கோயில் விழாக்களில் சாதி, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது, கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடவுளை வழிபட அனைத்து  உரிமைகளும் உண்டு என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  கூறியுள்ளது. பட்டியல், பழங்குடியினர் உட்பட அனைத்து சமூகத்தினரையும் இணைத்து விழா நடத்த உத்தரவிட்ட தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் உள்ள அய்யனார் மற்றும் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதி முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் என்பது அணைத்தது பக்த்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டு தலம், கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடவுளை வழிபட அனைத்து  உரிமைகளும் உண்டு. ஒருவரின் சாதி, நிறம், ஆகியவற்றின் அடிப்படையில் எவ்வித பாகுபாடும் பார்க்க கூடாது. இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் பட்டியலின சமூகத்தினர், பழங்குடியினர் என அனைத்து சமூகத்தினரையும் இணைத்து விழா கொண்டாடுமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது, அனைத்து சமூகத்தினரும் இணைந்து, அதிகாரிகளுக்குஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


Tags : God ,iCourt , Belief in God, all have rights to worship God, high court branch opinion
× RELATED தேவ ரகசியத்தை உடைக்கலாமா? : ஜோதிட ரகசியங்கள்