×

மனித வளர்ச்சி குறியீட்டில் 7 இடங்கள் பின்தங்கி, 161-வது இடத்துக்கு தள்ளப்பட்டது பாகிஸ்தான்: ஆப்கானிஸ்தானுக்கு 180-வது இடம்

மனித வளர்ச்சி குறியீட்டில் பாகிஸ்தான் 7 இடங்கள் பின்தங்கி, 161-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சமீபத்திய மனித வளர்ச்சி தரவரிசை பட்டியலில் 192-நாடுகளில் பாகிஸ்தான் 161-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐநா தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 189 நாடுகளில் அந்நாடு 154-வது இடத்தில் இருந்தது.

ஐ.நா. அமைப்பின் வளர்ச்சி திட்டம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில்: பாகிஸ்தானில் வாழும் நபர்களின் ஆயுட்காலம் சராசரியாக 66.1 ஆண்டுகள் என்றும் குழந்தைகளை அவர்களது 8 வயதில் பள்ளிக்கு சேர்க்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் மீது வெவ்வேறு பருவகால அதிர்ச்சிகள் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

இதனால், கடந்த காலத்தில் நாடுகளில் ஏற்பட்ட வளர்ச்சியானது பின்னோக்கி செல்கிறது என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. உலகில் பருவகால அதிர்ச்சிக்கான எடுத்துக்காட்டாக பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காணப்படுகிறது

இந்தியா, இலங்கை உள்ளிட்ட 9 தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் (180-வது இடம்) ஆகிய இரு நாடுகளே மனித வளர்ச்சியில் மிக பின்தங்கிய நிலையில் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Pakistan ,Afghanistan , Human Development Index, Pakistan, Afghanistan, Index
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...