வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா

சென்னை: தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு கடந்த இரண்டு நாட்களாக லேசான காய்ச்சல், இருமல், சளி போன்று அறிகுறிகள் இருந்த நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் சோதனையின் முடிவுகள் நேற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

Related Stories: