×

கோவை அருகே அதிகாலை விபத்து கார் கிணற்றில் பாய்ந்து கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி: ஓணம் பண்டிகை கொண்டாடி திரும்பியபோது சோகம்

தொண்டாமுத்தூர: கோவை அருகே  நேற்று அதிகாலை கிணற்றில் கார் கவிழ்ந்ததில் ஓணம் பண்டிகை கொண்டாட சென்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். கோவை வடவள்ளியை சேர்ந்தவர்கள் ரோஷன் (18), ஆதர்ஷ் (18), ரவி (18), நந்தனன் (18). இவர்கள் 4 பேரும் நண்பர்கள். கோவையில் வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வந்தனர். ரோஷன், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் கோவை சிறுவாணி ரோட்டில் உள்ள ஒரு கிளப்பில் ஓணம் பண்டிகை கொண்டாட காரில் சென்றார். இரவில் அங்கு தங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், நேற்று காலை காரில் மீண்டும் வடவள்ளி திரும்பிக்கொண்டு இருந்தனர். காரை ரோஷன் ஓட்டி வந்தார். காலை 6.15 மணி அளவில் கார், தென்னமநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து தோட்டம் ஒன்றின் இரும்பு கேட்டை உடைத்து கொண்டு 120 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் பாய்ந்தது.

இதில், காரை ஓட்டி வந்த ரோஷன் மட்டும் கதவைத் திறந்து வெளியே குதித்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மற்றவர்கள் காருடன் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராட்சத கிரேன் உதவியுடன் கிணற்றில் இறங்கி காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு  3 மாணவர்களின் சடலங்களை ஒவ்வொன்றாக மீட்டு கயிறு கட்டி கிணற்றுக்கு வெளியே எடுத்தனர். மற்றொரு விபத்து: கேரளாவில் இருந்து  பழநிக்கு வந்த கார், திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே  டயர் வெடித்து  அரசு பஸ் மீது மோதிய விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 3 பேர் பலியாயினர். 10  பேர் படுகாயமடைந்தனர்.

Tags : Coimbatore ,Onam festival , Early morning accident near Coimbatore kills 3 college students as car falls into well: Tragedy after returning from Onam festival
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்