2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை ஒழிக்க கூட்டு முயற்சி தேவை: ஜனாதிபதி முர்மு பேச்சு

புதுடெல்லி: இந்தியாவில் இன்னும் 2 ஆண்டுகளில் காசநோயை ஒழிக்க கூட்டு முயற்சி தேவை என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார். பிரதமரின் காசநோயற்ற பாரதம் என்ற செயலியை தொடங்கி வைத்து பாராட்டி பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ‘ஒரு நலத்திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும் பட்சத்தில் பல மடங்கு வெற்றி பெற வாய்ப்புள்ளது. நாட்டில் நோயுற்று இறப்பவர்களில் பெரும்பாலானோர் காசநோயால் இறக்கின்றனர். உலக அளவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவீதத்தினர் இந்தியாவில் மட்டுமே உள்ளனர். வரும் 2025ம் ஆண்டிற்குள் காசநோயை கூட்டு முயற்சியின் மூலம் ஒழிக்க வேண்டும்,’ என்று கூறினார். மேலும் அவர் நிக்சை மித்ரா 2.0 செயலியையும் தொடங்கி வைத்தார். இதன் மூலம், கூடுதல் நோய் கண்டறிதல், ஊட்டச்சத்து, சிகிச்சை கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்.

Related Stories: