×

பாஜ.வின் பிரபல டிக்டாக் நடிகை சோனாலி கொல்லப்பட்ட கோவா ஓட்டல் இடிப்பு

பனாஜி: பாஜ தேசிய பெண்கள் பிரிவின் துணை தலைவரும், பிரபல டிக்டாக் நடிகையுமான சோனாலி போகத், கோவாவுக்கு சுற்றுலா சென்றார். பிரபலமான அஞ்சுனா கடற்கரையில் அமைந்துள்ள கர்லீஸ் என்ற ஓட்டலில்  நடந்த போதை விருந்தில், அவர் மர்ம ரசாயன பொருள் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த உணவகத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கர்லீஸ் ஓட்டல் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு உள்ளதால், அதை இடிக்கும்படி கடந்த 2016ம் ஆண்டே கோவா கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது,  இந்த ஓட்டல் ஆக்கிரமிப்பு  இடத்தில் கட்டப்பட்டு இருப்பதால் இடிக்கும்படி உத்தரவிட்டது. இதைத் ெதாடர்ந்து, அரசு அதிகாரிகள் நேற்று காலை ஓட்டலை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். பாதி பகுதி  இடிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஓட்டலை இடிப்பதை நிறுத்துவதற்கான தடையை ஓட்டல் நிர்வாகம் பெற்றது. இதையடுத்து, இடிப்பு பணி பகல் 11.30க்கு நிறுத்தப்பட்டது.



Tags : BJP ,Sonali , Goa hotel demolition where BJP's popular Tik Tok actress Sonali was killed
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...