×

3டியில் உருவாகும் சூர்யாவின் படம்

சென்னை: சூர்யா தற்போது பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கிரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க  ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இதுதொடர்பான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘படப்பிடிப்பு தொடங்கியது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் தேவை’ என சூர்யா கூறியிருந்தார்.  இந்நிலையில் நேற்று படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இது சரித்திர கதை படமாக உருவாகிறது. போர் வீரன் வேடத்தில் சூர்யா காட்சி தருகிறார். இப்படம் 3 டியில் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Surya , Surya's film to be made in 3D
× RELATED பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு...