முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு விரைவில் சிலை; முதல்வருக்கு இளைஞர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு விரைவில் முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என்று முதல்வருக்கு தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் மதன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன்  வெளியிட்ட அறிக்கை: முன்னாள் ஜனாதிபதியும், இளைஞர்களின் நாயகனுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் திருவுருவ சிலை சென்னையில் அமைக்க வேண்டும் என்று 5 வருட காலமாக போராடி வருகிறோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடத்தில் கோரிக்கை வைத்த போது உடனடியாக நிறைவேற்றி சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக தமிழக முதல்வருக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்தநாள் விழா அக்டோபர் 15ம் தேதி நடைபெற உள்ளது. அதற்குள் ஒரு அடிக்கல் நாட்டு விழாவாக நடந்தால் கூட நன்றாக இருக்கும் என்பதை தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: