×

திருப்பதி மலைப்பாதையில் 27 முதல் மின்சார பேருந்து

திருமலை: திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் திருப்பதி- திருமலை மலைப்பாதையில் மின்சார பேருந்து இயக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை முதல்வர் ஜெகன் மோகன் அளித்ததை தொடர்ந்து, ஓலெக்ர்டா நிறுவனத்தின் தயாரிப்பான புதிய மாடல் எலெக்ட்ரிக் பேருந்து இன்று காலை திருப்பதிக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த பேருந்துகளை இயக்கும் நிர்வாக பொறுப்பு, ‘மெகா இன்ஜினியரிங்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 36 இருக்கைகள், குளிர் சாதனம். சிசிடிவி கேமரா, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகளை கொண்ட இந்த பேருந்து, பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ இயக்கலாம். வரும் 25ம் தேதிக்கு முன்பாக இன்னும் 10 பேருந்துகள் வர உள்ளன. ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் சுவாமிக்கு முதல்வர் ஜெகன் பட்டு வஸ்திரம் சமர்பிப்பார்.  அப்போது, இந்த பேருந்து போக்குவரத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

Tags : 27th Electric Bus ,Tirupati Hill Pass , 27 to Tirupati Hill Path electric bus
× RELATED சிசிடிவி கேமரா பதிவில் உறுதியானதால்...