×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் பைனலில் ஆன்ஸ் ஜெபர்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட போலந்தின் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக், துனிசியாவின் ஆன்ஸ் ஜெபர் தகுதி பெற்றுள்ளனர். அரையிறுதியில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியாவுடன் (28 வயது, 17வது ரேங்க்) மோதிய ஜெபர் (28 வயது, 5வது ரேங்க்) 6-1, 6-3 என நேர் செட்களில் மிக எளிதாக வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 6 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு அரையிறுதியில் பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலெங்காவை (24 வயது, 6வது ரேங்க்) சந்தித்த இகா ஸ்வியாடெக் 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்களிலும் சிறப்பாக விளையாடி சபலெங்காவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த ஸ்வியாடெக் 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 11 நிமிடம் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். பரபரப்பான பைனலில் இகா - ஜெபர் மோத உள்ளனர். யுஎஸ் ஓபன் வரலாற்றில், மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் போலந்து மற்றும் வடக்கு ஆப்ரிக்காவை சேர்ந்த வீராங்கனைகள் விளையாட உள்ளது இதுவே முதல் முறையாகும்.

Tags : Ann Jeffer ,US Open , Ann Jeffer in the US Open tennis final
× RELATED அபுதாபி ஓபன் காலிறுதியில் ஆன்ஸ்