×

பெரியபாளையம் அருகே 100 ஆண்டுகளுக்கு பிறகு அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பெரியபாளையம்: முக்கரம்பாக்கம்  கிராமத்தில் பழமை வாய்ந்த கிராம தேவதை செல்லியம்மன் மற்றும் திரிபுரசுந்தரி சமேத முக்காண்டீஸ்வரர் ஆலயத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு  கும்பாபிஷேகம் நடந்தது. கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெரியபாளையம் அருகே  முக்கரம்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு,  சுமார் 400 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த கிராம தேவதை செல்லியம்மன் மற்றும் திரிபுரசுந்தரி சமேத முக்காண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் கடந்த 1925ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதனையடுத்து கிராம மக்கள் பங்களிப்புடன் ஆலய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.  

இந்த விழாவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி அன்று பந்தகால் நடும் நிகழ்ச்சி  நடந்தது. இதனை தொடர்ந்து, கே.ஆர்.காமேஸ்வரர் குருக்கள் தலைமையில் 15க்கும் மேற்பட்ட  புரோகிதர்கள் கலந்துகொண்டு முதல் கால பூஜை, அன்று மாலை  இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகளும் நடந்த முடிந்தது. இதனை அடுத்து நேற்று காலை நான்காம் கால பூஜைகளான பூஜைகளான கணபதி ஹோமம், விசேஷ தீர்வ்ய ஹோமம், யாத்ரா தானம், பூர்ணாஹூதி உள்ளிட்ட யாகசாலை பூஜைகளும்  முடிந்தது.

இதன் பின்னர், புரோகிதர்கள் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அடங்கிய கலசங்களை மேல தாளங்கள் முழங்க கோயில் சுற்றி வளம் வந்து காலை 10 மணி அளவில் ஆலயத்தின் மீதுள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். பின்னர், பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. கோயிலுக்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் உள்ள மூலவர்களுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள், ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, பின்னர் வண்ண மலர்களால் திரு ஆபரணங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை முகராம்பாக்கம் கிராம பொதுமக்கள், விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags : Kumbabhishek ,Amman temple ,Periyapalayam ,Sami , Kumbabhishek ceremony at Amman temple near Periyapalayam after 100 years; A large number of devotees had a darshan of Sami
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...