×

பணியில் கவனம் செலுத்தாத 4 அமைச்சர்களை நீக்க முடிவு: ஆந்திர முதல்வர் ஜெகன் அதிரடி

திருமலை: பணியில் கவனம் செலுத்தாத 4 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய இருப்பதாக ஆந்திர முதல்வர் ஜெகன் தெரிவித்துள்ளார். ஆந்திர அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தலைமை தாங்கி முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: அமைச்சர்கள் சிலர் தவறு செய்கிறார்கள். இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்பேன். மாற்றம் இல்லை என்றால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். ஏற்கனவே பல்வேறு சர்வேக்கள் மூலம் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகளை தயார் செய்து பெற்றுள்ளேன்.

கட்சி மற்றும் ஆட்சிக்கான குரலை வலுவாக்குவதில் இருக்க வேண்டிய அமைச்சர்கள், துறை ரீதியாகவும் 6 மாதங்களுக்கு மேலாகியும் உரிய பிடிப்பு இல்லாத 4 அமைச்சர்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கடலோர ஆந்திராவை சேர்ந்த பெண் அமைச்சர் இருகிறார். முக்கிய துறை ஒப்படைக்கப்பட்டாலும், தன் துறை மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் கூறினாலும் அதற்கு சரியான முறையில் விளக்கம் அளிக்க தவறி வருகிறார். முந்தைய அமைச்சரவையில் தற்போது மூத்த அமைச்சராக பணியாற்றி வரும் சீமா ஆந்திரா பகுதியை சேர்ந்த அமைச்சரும், தன் துறை மீது உரிய ஈடுபாடின்றி இருக்கிறார்.

அவரையும் மாற்ற வேண்டும் என்று கட்சியினர் கூறி வருகின்றனர். இதனால், ஒரு பெண் அமைச்சர் உட்பட 4 பேர் பதவி பறிக்கப்படும். இவர்களின் பெயர்கள் எங்கும் குறிப்பிடப்படாவிட்டாலும், அமைச்சரவை கூட்டத்தில் அரசின் மீதான விமர்சனங்களுக்கு நிச்சயம் பதில் அளிக்க வேண்டும். கட்சி, அரசு விவகாரங்களில் அமைச்சர்களின் பணிகள் குறித்து உளவுத்துறையிடம் விசாரிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்கூட்டியே கடுமையான முடிவுகளை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளிக்கு பிறகு ஆந்திர அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : AP , Decision to remove 4 ministers who do not focus on work: Andhra Chief Minister Jagan takes action
× RELATED விஜயவாடாவில் மருத்துவக் கிடங்கில்...