×

ஓணம் பண்டிகை விடுமுறை கொடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோத்தகிரி: ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி நேற்று கொடநாடு காட்சி முனையை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா ஸ்தலமாக விளங்குவது கோடநாடு காட்சி முனை. இங்கு நாள்தோறும் உள் மற்றும் வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்து செல்வர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது மிதமானது முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கோடநாடு காட்சி முனை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அதிக மழை பெய்து காட்சி முனையில் அதிக அளவு மேகம் சூழ்ந்து காணப்படும். சில நேரங்களில் இதமான காலநிலையும், இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவும். நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோடநாடு காட்சி முனைக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இங்கு இயற்கை அழகு மிகுந்த ஆழமான பள்ளத்தாக்கு, ராக்பில்லர், தெங்குமரஹாடா காட்சி, பவானிசாகர் அணை காட்சி போன்றவற்றை கண்டுகளித்து புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

Tags : Kodanadu , Tourists flock to Koda Nadu view point for Onam festival holiday
× RELATED வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு:...