குரூப் 1 தேர்வு நவம்பர் மாதம் 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப்-1 தேர்வு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் துணை கலெக்டர், டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்பட பல்வேறு துறைகளில் 92 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி வெளியிட்டது. அறிவிப்பு வெளியானது முதல் டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர். முதல் நிலைத்தேர்வு (Prelims), முதன்மைத் தேர்வு (Mains) மற்றும் நேர்காணல் (Interview) ஆகிய 3 கட்டங்களில் தேர்வு நடைபெறும் என்றும், முதல்நிலைத் தேர்வு இம்மாத இறுதியில் (செப்டம்பர் 30) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நவம்பர் மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 21.07.2022 நாளிட்ட அறிவிக்கை எண் 12/2022ல் 30.10.2022 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 2022, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -1(தொகுதி-1) முதனிலைத் தேர்வானது நிர்வாக காரணங்களுக்காக 19-11-2022 அன்று நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளது.

Related Stories: