×

சேத்துப்பட்டு அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் 3 கோயில்களில் மகாகும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் மதுரா தச்சம்பட்டு கிராமத்தில் வர சித்தி விநாயகர்,  சோலை வாழியம்மன், ரேணுகா தேவி ஆகிய கோயில்கள் திருப்பணி செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் 5ம் தேதி முதல் பூஜையும் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. நேற்று காலை  இரண்டாம் கால யாசபூஜா மகா பூர்ணாஹூதி கடம் புறப்பாடுடன் சோலை அம்மன், ரேணுகா தேவி, வரசித்திவிநாயகர் ஆகிய கோயில்களில் கோபுர கும்பாபிஷேகம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது .

விழாவில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் முன்னாள் எம்எல்ஏ கே.வி.சேகரன், முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன், ஒன்றிய குழு துணை தலைவர் லட்சுமி லலிதவேலன், ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா வேலாயுதம் , போளூர் தொகுதி எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Tags : Mahakumbabhishekam ,Dachambatu ,Chetupattu , Mahakumbabhishekam in 3 temples in Dachampattu village next to Sethupattu.
× RELATED இலங்கை சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயம்...