கனல் கண்ணனின் ஜாமீன் நிபந்தனையை நிறுத்தி வைத்தது ஐகோர்ட்

சென்னை: திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனின் ஜாமீன் நிபந்தனையை நாளை முதல் செப்டம்பர் 17 வரை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. சென்னை போலீசார் முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை 8 நாளைக்கு நிறுத்தி வைத்துள்ளது. படப்பிடிப்புகாக கேரளா செல்வதால் ஜாமீன் நிபந்தனையை நிறுத்தி வைக்க கோரிய கனல்கண்ணனின் மனுவை விசாரித்து உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Related Stories: