×

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கியது உயர்நீதிமன்றம்

சென்னை: சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு மேலும் 2 வாரங்கள் உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. விஷால் ஆஜராகாத நிலையில் பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதை அடுத்து கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்புச்செழியனின் கடனை அடைக்க விஷால் வாங்கிய ரூ.21.29 கோடி கடனை செலுத்தாமல் படம் வெளியிடுவதாக லைகா வழக்கு தொடர்ந்தது.

நடிகர் விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் பட தயாரிப்பிற்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.21.29 கோடி கடன் பெற்றுள்ளார். இந்த கடனை திருப்பி செலுத்துவதாக லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதை தொடர்ந்து விஷாலுக்கும், லைகா நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இந்த கடன் தொகையை முழுவதும் செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து பட உரிமைகளும் லைகா நிறுவனத்திற்கு வழங்குவதாக உத்திரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட தடைகோரி லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ரூ.15 கோடியை டெபாசிட் செய்ய விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவின்படி இந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி 2 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் செப்.23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Tags : High Court ,Vishal , High Court granted actor Vishal 2 more weeks to file property details
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...