வால்பாறை பகுதியில் சாரல் மழை

வால்பாறை : வால்பாறை பகுதியில் கடந்த சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நீடித்து வரும் கடும் குளிர் நீடிக்கிறது.வால்பாறை பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. மழையால் சிற்றோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால், சோலையார் அணை தொடர்ந்து நீர் ததும்ப உள்ளது. 165 அடி உயரம் உள்ள அணையில் 161,5 அடி நீர்மட்டம் உள்ளது.

அணையில் இருந்து சேடல் பகுதியில் இருந்து 1084 கன அடி நீர் வழிந்து பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. அணைக்கு வினாடிக்கு 1910 கன அடி நீர் வரத்து உள்ளது. சின்னகல்லார் அணையில் இருந்து வெளியேறும் நீர் மலை குகை கால்வாயில் வெள்ளமலை எஸ்டேட்டில் உள்ள டனல் வழியாக வெளியேறி நடுமலையாற்றி கலந்து கூழாங்கல் ஆறு வழியாக சோலையார் அணை செல்கிறது. இந்நிலையில் வெள்ளமலை மட்டம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆறு நீர் ததும்ப காட்சியளிக்கிறது.

Related Stories: