திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே வடவீதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்-ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் வடவீதி சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை பஸ் நிலையம் ரவுண்டானா சந்திப்பு அருகே அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமையான வடவீதி சப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம், கடந்த 2ம் தேதி விக்கேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக கோ பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, 108 கலச பூஜை, யாகசாலை ஹோமம் ஆகியவை நடந்தது.

அதைத்தொடர்ந்து, நேற்று காலை மங்கள இசையுடன் மகா கும்பாபிஷேகம் தொடங்கியது. பின்னர், காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து, கலசம் புறப்பாடு நடந்தது. காலை 11 மணியளவில், சுப்பிரமணி சுவாமி கோயில் விமானம் மற்றும் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மூலஸ்தான கும்பாபிஷேகம்

நடந்தது.

அப்போது, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘அரோகரா அரோகரா’ என பக்திப் பரவசத்துடன் முழங்கினர். அப்போது, கும்பாபிஷேக புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, நேற்று மாலை திருக்கல்யாண உற்சவமும், சுவாமி திருவீதியுலாவும் நடந்தது. அதன்தொடர்ச்சியாக, இன்று முதல் 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேக விழாவில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: