டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்று சாதனை

பெர்ன்: டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜூரிச்சில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 88.44மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.

சுவிட்சர்லாந்தின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தளகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இறுதிப்போட்டியில் 88.44மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.  

இதன் மூலம் டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். இதையடுத்து நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவிற்கு பலதரப்பினரிடையே இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

Related Stories: