கார்கில் நினைவிடத்தில் அஜித்

லடாக்: கார்கில் நினைவிடத்துக்கு சென்று நடிகர் அஜித் அஞ்சலி செலுத்தினார். வினோத் இயக்கும் படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. அஜித் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த இடைவெளியில் லடாக் சென்றிருக்கிறார் அஜித். அங்கு பைக் ரைடிங்கில் ஈடுபட்டு வருகிறார். காடு, மலை என பல பகுதிகளில் பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கார்கில் நினைவிடத்துக்கு அஜித் சென்றார். அங்கு மலர்வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பைக் பயணம் மேற்கொள்வது அஜித்தின் நீண்ட கால ஆசை. அதன்படி வடமாநிலங்களுக்கு சென்ற அவர், லண்டனிலும் பைக் பயணம் மேற்கொண்டார். இப்போது லடாக் சென்றிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்த பிறகு மேலும் சில வெளிநாடுகளுக்கு சென்று பைக் பயணத்தை அவர் மேற்கொள்ள இருக்கிறார் என அஜித்துக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: