×

புதிதாக 37 அமைச்சர்கள் நியமனம், இலங்கை அமைச்சரவையில் நுழைந்த ராஜபக்சே குடும்பம்; கோத்தபய அண்ணன் மகனுக்கு பதவி

கொழும்பு: இலங்கையில் 37 புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர் இதில், ராஜபக்சேக்களின் அண்ணன் மகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிக்கு கண்டனம் தெரிவித்து அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து,  மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்தும், கோத்தபய அதிபர் பதவியில் இருந்தும் விலகினர். மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என 51 நாட்கள் நாடு நாடாக சுற்றிய கோத்தபய,  கடந்த வாரம் நள்ளிரவில்  இலங்கை திரும்பினார். இந்நிலையில், அதிபராக உள்ள ரணில் தலைமையில் அனைத்து கட்சி கூட்டாட்சி அமைக்கப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இலங்கை அமைச்சரவை 37 புதிய இளம் தலைமுறை அமைச்சர்களுடன் நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதில், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா, எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோத்தபய, மகிந்த ராஜபக்சேவின் அண்ணனான சமல் ராஜபக்சேவின் மகன் சசீந்திர ராஜபக்சேவுக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருடைய தந்தை வகித்த நீர்பாசனத் துறையும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தன்னை அதிபராக்கிய கோத்தபய, மகிந்தாவுக்கு ரணில் காட்டிய நன்றியாக கருதப்படுகிறது. இலங்கை அரசில் ராஜபக்சே குடும்பம் மீண்டும் மெல்ல ஊடுருவுவதை கண்டு, மக்கள் கொந்தளித்துள்ளனர். இதனால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags : Rajapakse ,Gotabaya , 37 new ministers appointed, Rajapakse family entered the Sri Lankan cabinet; Gotabaya's brother's son's position
× RELATED இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார...