சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க இந்தோ - பசிபிக் பகுதியில் கூட்டு ராணுவ ஒத்துழைப்பு; 2+2 பேச்சில் இந்தியா, ஜப்பான் முடிவு

டோக்கியோ: இந்தியா - ஜப்பான் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, போர் விமானம் உள்ளிட்ட கூட்டு ராணுவ போர் பயிற்சியை மேம்படுத்த, 2+2 அமைச்சர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா - ஜப்பான் இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதில்,  இந்தியாவின் தரப்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்கின்றனர். ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் யாசுகாஜு ஹமாடாவுடன் ராஜ்நாத் சிங் ஒன்றரை மணி நேரம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோஷிமசா ஹயாசியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்த பிராந்தியத்தில் முப்படைகள் மற்றும் கடலோரக் காவல்படைகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க, அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த குழுக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், இருநாடுகளுக்கும் இடையே போர் விமானம் உள்ளிட்ட கூட்டு ராணுவ போர் பயிற்சியை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்திய பாதுகாப்பு துறைகளில் முதலீடு செய்யும்படி ஜப்பான் பாதுகாப்பு தொழில் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

Related Stories: