×

குளத்தில் மூழ்கி உயிரிழந்த மகன் உப்பில் மூடி வைத்தால் இறந்தவன் பிழைப்பான்; கர்நாடகாவில் பெற்றோர் மூடநம்பிக்கை

பல்லாரி: கர்நாடக மாநிலம், பல்லாரி மாவட்டம், சிறுவாரா கிராமத்தை சேர்ந்த சிறுவன் சுரேஷ் (10). இவர் தனது நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்றான். நீச்சல் தெரியாத சுரேஷ், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். தகவல் அறிந்த சிறுவனின் பெற்றோர்கள், ‘எனது மகன் இறக்கவில்லை. அப்படியே இறந்திருந்தாலும் உப்பை கொட்டி உடலை மூடிவைத்தால் உயிர் பிழைத்து விடுவான்,’ என்று கூறி, 5 மூட்டை உப்பை கொண்டு வந்து சிறுவனின் தலையை மட்டும் விட்டு உடல் மீது போட்டனர்.

ஆனால், 4 மணி நேரமாகியும் சிறுவன் பிழைக்கவில்லை. இதை பார்த்த அப்பகுதி மக்கள், ‘உப்பால் மூடிவைத்தால் இறந்தவர்கள் எல்லாம் பிழைத்து விடுவார்கள் என்றால், உலகத்தில் இறந்த எல்லோரையும்  பிழைக்க வைத்துவிட முடியுமே? இது, உங்களின் மூட நம்பிக்கை...’ என்று அவர்களை சமாதானம் செய்து சிறுவனின் உடலை மீட்டு தகனம் செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Karnataka , If the son who drowned in the pond is covered with salt, the dead person will survive; Parental Superstition in Karnataka
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...